பலாத்கார சம்பவத்தில் புது சர்ச்சை- மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறும்போது குறுக்கிட்ட போலீசார்!
டெல்லி: நாட்டை உலுக்கி டெல்லியை போர்க்களமாக்கியிருக்கும் பாலியல் பலாத்கார சம்பவத்தில் புதிய சர்ச்சை வெடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்ற போது 3 போலீஸ் உயர் அதிகாரிகள் குறுக்கீடு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியிடம் கடந்த 21-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெண் மாஜிஸ்திரேட் உஷாசதுர்வேதி, மருத்துவமனையில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது சில உயர் போலீஸ் அதிகாரிகள் குறுக்கீடு செய்திருக்கின்றனர். தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நிர்பந்தித்திருக்கின்றனர். அதாவது மாஜிஸ்திரேட்டுக்கு போட்டியாக வாக்குமூலம் பெற முயற்சித்திருக்கின்றனர். மாணவியின் தாய் விருப்பத்தை மீறி போலீசார் அப்பெண்ணை வீடியோவும் எடுத்திருக்கின்றனர்.
இப்படி மருத்துவமனையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒரு கடிதமாக டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு அனுப்பிவிட்டார் மாஜிஸ்திரேட். இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு தெரிவித்திருக்கிறார் ஷீலா.
இதைத் தொடர்ந்து குறுக்கீடு செய்த 3 காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடுவது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications