பெண்களுக்கான பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும்: பிரணாப் முகர்ஜி

கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளதாவது:
டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம் மாணவி மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான திடீர் தாக்குதலை கேள்விப்பட்டு நான் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை நாம் மறந்து விடமுடியாது.
நாடு முழுவதும் இந்த பலாத்கார சம்பவத்துக்கு எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஜனாதிபதி மாளிகையிலும் மாணவ-மாணவிகளின் போராட்டம் நடக்கிறது.
இந்த நன்நாளில் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மன உறுதியும் தைரியும் படைத்த அந்த மாணவி விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
நமது நாட்டில் பெண்கள் அனைவரும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் நாம் அவர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். பெண்களுக்கு பூரண பாதுகாப்பு உள்ளது என்பதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.
ஒருவருக்கொருவர் அன்பு காட்டுதலையும், மற்றவர்களுக்காக வாழும் தியாகம் பற்றியும் மனித குலத்துக்கு உணர்த்த வந்த இயேசுநாதரை நினைவு கூறும் இந்நேரம் நமது எண்ணங்களையும், இதயங்களையும் நல்ல உணர்வுகளால் புதுப்பிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஒளிஏற்றும் இந்த தருணத்தில் பாதுகாப்பு உணர்வும், பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கும் நம்மிடையே பரவட்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications