தமிழகத்தில் ஆம் ஆத்மியின் பங்கு என்ன?-ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாவுடன் ஒரு நேர்முகம்

இந்த நிலையி்ல இக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தமிழக ஒருங்கிணைப்பாளராக கிறிஸ்டினா சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை தமிழகத்தில் வளர்க்க சில திட்டங்களுடன் இவர் செயல்படத் தொடங்கியுள்ளார்.
கிறிஸ்டினா சாமியிடம் தமிழகத்தில் உங்களது கட்சி என்ன செய்யப் போகிறது என்பது குறித்து சில கேள்விகளைக் கேட்டோம்.
அந்த நேர்முகம்..
தாங்கள் ஆரம்பத்தில் சுவாதி பெண்கள் என்ற அமைப்பை எதற்காக துவங்கினீர்கள் ?
வீட்டில் பெண்கள் எல்லாம் முடங்கிக்கிடக்கூடாது. பெண்களுக்கும் கல்வி, அரசியல் என எல்லா உரிமைகளும் உள்ளது. அதனை அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுவாதி பெண்கள் அமைப்பை துவக்கினோம். நாளடைவில் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஏன் அடுத்து பெண்கள் முன்னணிக்கு மாறினீர்கள் ?
பெண்கள் முன்னணி என்பது சுவாதி பெண்கள் இயக்கத்தைப் போல பல குழுக்களை கொண்டாத இருந்தது. அதில் சுவாதி பெண்கள் இயக்கமும் ஒரு அங்கம். தனி அமைப்பாக இருந்து மக்கள் கோரி்க்கை அரசிடம் சொன்னால் உரிய முக்கித்துவம் கிடைக்கவில்லை. பெண்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதை மாற்ற வேண்டும் என்றும், பெண்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பெண்கள் முன்னணியில் இணைந்தோம்.
அரசியல் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது ?
நாங்கள் கரூர் மாவட்டத்தில் 1991 ம் வருடம் சுவாதி பெண்கள் இயக்கத்தை துவக்கினோம். படிப்படியாக கரூரைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எல்லாம் விரிவுபடுத்தி, மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். ஆனால், பிரச்சனை என்று வரும் போது, வரும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அப்போதைக்கு சமாதானம் செய்துவி்ட்டு செல்கின்றனர். பின்பு கோரிக்கைகளை பற்றி பிரிசீலிப்பது இல்லை. காரணம் எங்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினர். இதை நாங்கள் தெரிந்து கொண்டோம். நாமே நேரடியாக அரசியலில் ஈபடுபட்டால் என்ன என யோசனை செய்து கொண்டு இருந்தோம். அப்போது பெண்கள் முன்னணி என்ற அமைப்பு மூலம் கடந்த 2006 ம் வருடம் முதல் பாராளுமன்ற தேர்தல், சட்ட மன்றத் தேர்தல், உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்களை பெற்றோம். அது முதல் எங்களுக்கு அரசியலில் நம்பி்கை அதிகம் வந்தது.
சரி, ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது செல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன ?
நிர்பந்தம் எல்லாம் ஏதும் இல்லை. சாதாரண மக்கள் தற்போது உள்ள அரசியல் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் , அரசியல் வாதிகள் மீதும் மிகுந்த வெறுப்பில் உள்ளனர். காரணம், பெரும்பாலான கட்சிகள் ஊழல் பின்னணி கொண்டவையாக இருப்பதால் வெறுக்கின்றனர். நாட்டின் சமீப கால கால ஓட்ட நிலையில், சாமானிய மக்களுக்கான உரிமை, கடைமை, வாழ்வாதராம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. அவைகளை மீட்டு எடுக்கவும் , பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவைகளுக்காக போராடவும் முடிவு செய்துள்ளோம். அதனால் தான் அரசியலில் களம் இறங்கினோம். அதற்கு ஆம் ஆத்மி கட்சி தான் சரியான களம் என முடிவு களம் இறங்கினோம்.
சாமானியர்கள் கட்சி என எதற்காக பெயர் வைக்கப்பட்டது?
ஆமாம். இது சாமானியர்களுக்கான கட்சி தான் என்பதை முதலில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். பெரும்பாலான மாநில கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகம். காரணம். பொது மக்களை வாக்கு வங்கிக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அதிகார குவியல்கள் கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். மக்களிடம் அதிகாரம் இல்லை. ஆனால், நாங்கள் அதிகாரத்தை பரவலாக்கி அதில், மக்களையும் பங்கு பெற செய்வோம். பொறுத்து இருந்து பாருங்கள் எங்கள் நடவடிக்கையை.
உங்கள் கட்சிக்கு தமிழகத்தில் வரவேற்பு எப்படி உள்ளது ?
நாங்கள் எதிர்பார்த்தை விட நன்றாக உள்ளது. மனித உரிமைப் போராளிகள், ஊழல் எதிர்ப்பாளர்கள், நாட்டு நலனில் அக்கரை கொண்டவர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என பலரிடம் இருந்தும் வாழ்த்தும், வரவேற்பும் கிடைத்தது. போகப் பேகத்தான் மேலும் அறிந்து கொள்ள முடியும்.
அரவிந்த் ஜெக்ரிவால் போல் ஊழல் எதிர்ப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பீர்களா அல்லது மற்ற பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்களா ?
ஊழல் என்பது தனி மனிதனை மட்டும் அல்ல. நாட்டையே பாதிக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கின்றது. அதனால் தான் அதற்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் அதையும் தாண்டி பொது மக்கள் பாதிக்கும் எந்த விவகாரத்தையும் கையில் எடுத்து அவர்களுக்காக போராடுவோம். அதற்கு முன் உதாரணமாக டெல்லியில் பொது மக்கள் வீடுகளை டெல்லி மாநகராட்சி இடித்த போது, அரவிந்த் கெஜ்ரிவாலே ரோட்டுக்கு வந்து மக்களுக்காக போராடினார். அதே போல நாங்களும் தமிழகத்தில் செயல்படுவோம்.
தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா ?
நமது நாட்டில், மனித மாண்புகளும், இழப்புகளும் அதிக அளவில் உள்ளது. அவைகளை மீட்டு எடுக்க வேண்டிய தேவை தற்போது மிக அதிகமாகவே உள்ளது. முக்கியமாக ஜனநாயக்ததையே மீட்டு எடுக்க வேண்டிய நிலையும், விடுதலை செய்ய வேண்டியும் உள்ளது. இதற்கு தேவையான நம்பிக்கை எங்களிடம் நிறை உள்ளது. எங்களிடம் வரும் மக்களும் இதையே வலியுறுத்துவதால் நாங்கள் எங்கள் இலக்கை அடையவதில் பெரிய பிரச்சனை இல்லை என்றே நம்புகின்றோம்.
எந்தவிதமான போராட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க திட்டமிட்டுள்ளீர்கள் ?
ஊழல் என்பது அரசியலில் அடிப்படை அம்சமாக மாறிவிட்டது. இதனால் சாமானிய மக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி தடை பட்டுள்ளது. இவைகளை எல்லாம் மனதில் வைத்து, முக்கிய பிரச்சனைகளை, தேவையான நேரத்தில் கையில் போராட தயங்க மாட்டோம்.
அப்படி என்றால் தமிழகத்தில் உங்கள் அடுத்த கட்ட திட்டம் என்ன?
தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் மிகவும் நிதானமாக செயல்படுகின்றோம். காரணம் இங்கு படித்தவர்கள் அதிகம் என்பதால் எங்கள் கட்சியின் கொள்கைகளை எளிதில் புரிந்து கொள்கின்றனர். அதனால் பல முக்கியஸ்தர்கள் எங்கள் கட்சிக்கு விரும்பி வருகின்றனர். இந்த நிலையில், முதலில் கட்சியின் அடிப்படை கட்டுமானத்தை உறுதிப்படுத்த உள்ளோம். மாநில குழுக்கள், மாவட்ட குழுக்கள் மற்றும் கிராம சபைக் குழுக்கள் என பல கட்ட குழுக்களை உருவாக்கும் முயற்சியில் உள்ளோம். அதில் எங்களுக்கு எளிதில் வெற்றி கிடைத்துள்ளது.
உங்கள் கட்சிக்கு வருபவர்களிடம் உறுதி எல்லாம் வாங்கப்படுவதாக கூறப்படுவது பற்றி ?
எங்களிடம் வரும் அனைவரும் அவர்களே விரும்பி ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள் யாருக்கும் லஞ்சம் கொடுப்பது இல்லை. வாங்குவதும் இல்லை என்று. இது நல்ல விஷயம் என்பதால் நாங்களும் இதை ஆதரிக்கின்றோம். வலியுறுத்துகின்றோம். ஊழலை ஒழிப்பதே எங்கள் முதல் வேலை.
மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல், ஆம் ஆத்மி கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?
ஆம், இந்திய அளவில் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் 250 பேர் உள்ளனர். இவர்கள் எல்லாம் ஒன்று கூடி எங்களைப் போன்ற 30 பேர் கொண்ட தேசிய செயற்குழுவை உருவாக்கியுள்ளனர். இதில் நானும், நியூ டெல்லியைச் சேர்ந்த ஷாஷியா என்ற இருவர் தான் பெண்கள்.
ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றதால் உங்களுக்கு மிரட்டல் எதுவும் வந்ததா ?
இதுவரை வரவில்லை. இனியும் வரப் போவதில்லை என்றே நம்புகின்றோம். காரணம், நாங்கள் மக்களோடு மக்களாக இருப்பதால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. வந்தால் அதையும் சமாளித்துதானே ஆகவேண்டும் என்றார் கிறிஸ்டினா சாமி.












Click it and Unblock the Notifications