மும்பையில் மாஜி. காதலன் கத்தியால் குத்தியதில் கல்லூரி மாணவி பலி
மும்பை: மும்பையில் முன்னாள் காதலானால் கத்தியால் குத்தப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மும்பையில் உள்ள சேத்தனா கல்லூரியில் படித்தவர் பாயல் பல்சாரா(19). அவருடன் படித்தவர் நிகில் பங்கர்(22). பாயல் ஒரு காலத்தில் நிகிலை காதலித்துள்ளார். ஆனால் பெற்றோர் எதிர்க்கவே அவர் நிகிலைப் பிரிந்துள்ளார். இதையடுத்து நிகில் பாயலுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை பாயல் தனது தோழிகளுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருக்கையில் நிகில் அவரைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நிகில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாயலை பலமுறை குத்தினார். பிறகு தன்னைத் தானே 4 முதல் 5 தடவை வரை குத்திக் கொண்டதோடு தனது கழுத்தை அறுத்துக் கொண்டார் நிகில்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாயலை பந்த்ரா பகுதியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நிகில் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பாயலுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திர சர்மா கூறுகையில்,
பாயலை காப்பாற்ற நாங்கள் கடந்த 3 நாட்களாக போராடினோம். அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவரது ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய முதலில் அறுவை சிகிச்சை செய்தோம். அதன் பிறகு அவரது குடலின் இரு பகுதிகளை நீக்க வேண்டியதாகிவிட்டது. பின்னர் அவரது ஈரல் பகுதியில் ஏற்பட்டிருந்த சேதத்தை சீர் செய்தோம். அவரது இரு கைகளிலும் பலத்த காயம் இருந்தது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications