சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார் பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி

டெல்லியில் கடந்த 16 ம் தேதி இரவு மருத்துவ மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேருந்தில் பயணம் செய்தபோது 6 பேர் சேர்ந்த கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இரும்பு தடியால் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அந்த மாணவிக்கு ஜப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மாணவியின் வயிற்றில் இரும்பு கம்பியால் தாக்கியதால் சிறுகுடல் பகுதி சேதம் அடைந்தது. அந்த இடத்தில் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டது. சேதம் அடைந்த குடல்பகுதி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.
கடந்த 10 நாட்களாக மாணவி உயிருக்கு போராடி வருகிறார். 24 மணி நேரமும் டாக்டர்கள் அருகில் இருந்து உடல்நிலையை கண்காணித்து வந்தனர். செயற்கை சுவாசம் மற்றும் மருத்து உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
ஆபரேசன் செய்யப்பட்ட இடத்தில் ரத்தக் கசிவும், தொற்றும் ஏற்பட்டது. ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருப்பதால் ரத்தப்போக்கு அபாயம் உள்ளது. இதனால் உடல் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்படலாம் என்று டாக்டர்கள் அச்சம் தெரிவித்தனர். நேற்று மாலை 4.30 மணிக்கு மாணவியின் உடல் நிலை பற்றி, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடுவதாக இருந்தது. பின்னர், அறிக்கை வெளியிடும நேரம் 6.30 மணியாக ஒத்திவைக்கப்பட்டது. இரவு 10 மணிவரை மாணவியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து
எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு 10.30 மணியளவில், சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் இருந்து, அந்த மாணவியை ஏற்றிக்கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நோக்கி விரைந்தது. பின்னர் அவர் ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள பிரபலமான மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் அவரை தற்போது சேர்த்துள்ளனர்.
உடலின் உள்ளுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகபுகழ் பெற்ற இந்த மருத்துவமனையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அமர் சிங்கிற்கு 2009 ஆண்டு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதே மருத்துவமனையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த மே மாதம் சிகிச்சை பெற்று நலமடைந்து நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications