'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு... டிசம்பர் ஷாக்!
ஆண்டின் முடிவான டிசம்பரில் பெரிய அளவில் பரபரப்பு இல்லாவிட்டாலும் கூட சில அதிரடி திருப்பங்களுடன் கூடிய நிகழ்வுகளும் இடம் பெறவே செய்தன.
மதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் தடாலடியாக அதிமுகவுக்குத் தாவியது இந்த மாதத்தில்தான். மின்வெட்டு காரணமாக இருட்டில் சமையல் செய்த பெண் காலையில் பார்த்தபோது சாம்பார் சட்டியில் பாம்பின் எலும்புக் கூடு இருப்பதைப் பார்த்து அதிர்ந்த சம்பவமும் தமிழகத்தில் நடந்தது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்தும் காட்டுத் தீ போல சென்னையில் வதந்திகள் பரவின. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன் என்று கருணாநிதியே விளக்கம் அளித்து அதை புஸ்வாணமாக்கினார்.

கிருஷ்ணகிரி பெண் கலெக்டர் பூஜா குல்கர்னி சாலை விபத்தில் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பூஜா குல்கர்னி சாலை விபத்தில் படுகாயமடைந்தார். 11 குழந்தைகளுக்குத் தந்தையான டபேதார் முனிராஜ் விபத்தில் உயிரிழந்தார்.

அதிமுகவில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத்
மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. அடுத்த சில நாட்களில் இன்னோவா காரையும் பரிசாகப் பெற்றார்.

கருணாநிதி குறித்து பரபரப்பு வதந்தி
திமுக தலைவர் கருணாநிதி குறித்து பரபரப்பு வதந்தி கிளம்பியது. ஆனால், கருணாநிதியே அதை மறுத்தார். எனது உடல் நலம் குறித்து காலையிலிருந்தே விஷமிகள் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று டிவிடட்ர், பேஸ்புக் மற்றும் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்தார் கருணாநிதி.

'பவர் கட்'டுக்கு நடுவே சமையல்... சாம்பாரில் மிதந்த பாம்பு...ஷாக்கில் பெண்!
சென்னை அருகே மின்சாரத் தடை காரணமாக இருட்டில் சமையல் செய்தார் ஒரு பெண். சாம்பாரை வைத்து அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வீட்டாருக்கு சாப்பாடு பரிமாறினார். அடுத்த நாள் காலையில் சாம்பார் இருந்த பாத்திரத்தைப் பார்த்தபோது, அதில், பாம்பின் எலும்புக் கூட கிடந்ததைப் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார்.

புதிய பொலிவுடன் எம்.ஜி.ஆர். நினைவிடம்
சென்னை மெரினா கடற்கரையில் 8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தை ஜெயலலிதா திறந்துவைத்தார்.

'தலைமறைவு' துரைதயாநிதிக்கு ஒருவழியாக முன்ஜாமீன்!
தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளை வழக்கில் பல மாதங்களாக தொடர்ந்து தலைமறைவாகிப் போன மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு முன்ஜாமீன் கிடைத்தது.

ராமர் படம் போட்ட சேலை .. குஷ்புவைக் கண்டித்து போராட்டம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தைப் போதித்த ராமர் உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் இடம் பெற்ற சேலையை மார்பில் போர்த்திக் கொண்டு பொது விழாவுக்கு வருவதா என்று கூறி நடிகை குஷ்புவைக் கண்டித்து நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

கலாநிதி மாறன் மீது 4 பிரிவுகளில் வழக்கு
திரைப்பட இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பாமகவின் மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, ஜி.கே. மணி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

திமுக அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு பங்கேற்பு!
மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னையில் கட்சித் தலைவர் கருணாநிதி, நடிகை குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

அன்பழகனுக்கு 91 வயது
திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி மாலையி் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

51 சாதி சங்கங்களை இணைத்து புதிய அமைப்பு உருவாக்கினார் ராமதாஸ்
மதுரையில் 51 சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து புதிய அமைப்பை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருவாக்கினார்.

இன்று உலகம் அழியவில்லை
மயன் காலண்டர்படி இன்று உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் உலகில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாமல் பத்திரமாக இருந்தது.

நள்ளிரவில் மெரினா பீச்சில் நடிகை ரோகிணி போராட்டம்
கற்பழிப்புக் குற்றங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடிகை ரோகினி தலைமையில் கல்லூரி மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனைவி மரணம்
திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனைவி சாந்தகுமாரி இன்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

நில ஆவணப் பறிப்பு வழக்கு... இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் கோர்ட்டில் சரண்
400 ஏக்கர் நிலம் தொடர்பான சொத்துப் பத்திரங்களைப் பறித்துச் சென்றதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் பெற்ற இந்து என். ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.

சேலம் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி
சேலம் மேச்சேரி அருகே பட்டாசு ஆலை கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், பட்டாசு ஆலை அதிபர் சாந்தி உள்பட 7 பேர் பலியானார்கள்

அண்ணாநகர் வால்மார்ட் ஆபீஸ் முற்றுகை: போலீஸ் தடியடி-1,000 பேர் கைது
சென்னை அண்ணா நகர் மேற்கில் உள்ள வால்மார்ட் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தா. பாண்டியன் உள்பட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications