நெல்லை: டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் பலி!
Subscribe to Oneindia Tamil
நெல்லை : நெல்லை அருகே டெங்கு காய்ச்சலுக்கு கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரமான்தேவியைச் சேர்ந்த நீவநதி கிருஷ்ணம்மாளுக்கும் தச்சநல்லூரைச் சேர்ந்த லட்சுமணராஜாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கிருஷ்ணம்மாள் கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், கிருஷ்ணம்மாளுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சுயநினைவை இழந்ததால் அவர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணம்மாள் பரிதாபமாக பலியானார்.












Click it and Unblock the Notifications