டெல்லி பலாத்காரப் பெண்ணின் நிலை மிகவும் கவலைக்கிடம்- சிங்கப்பூர் மருத்துவமனை

நேற்று இரவு பலாத்கார கொடுமைக்குள்ளான மாணவியை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் கொண்டு சென்றனர். அங்கு பிரபலமான மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு காலை 9.05 மணிக்கு நோயாளி கொண்டு வரப்பட்டார். அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
அவரை மருத்துவர்கள் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்தியத் தூதரகத்துடன் இணைந்து மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
நோயாளியின் தனிமைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அனைவரும் மதிப்பளித்து இடையூறு செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
டெல்லி பெண்ணுடன், அவரது பெற்ரோர், டாக்டர் யாதின் குப்தா தலைமையிலான டாக்டர்கள் குழு ஆகியோரும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications