''இவன் பாலியல் குற்றவாளி'': இனி பெயர், போட்டோவுடன் நெட்டில் போடப் போகிறார்கள்
டெல்லி: திருடர்கள் ஜாக்கிரதை என்று பொது இடங்களில் பெயரும், புகைப்படமும் ஒட்டப்பட்டிருப்பதைப் போல இணையதளத்தில் பாலியல் குற்றவாளிகளின் பெயரும் புகைப்படமும் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு, மேற்குவங்காளம், உள்ளிட்ட மாநிலங்களிலும் பாலியல் சம்பவங்கள் வெளியானது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஒரு தரப்பினர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மத்திய அரசு இந்த விவகாரத்தில் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, நாடு முழுவதும் ஏற்கெனவே பலாத்கார வழக்கில் சிக்கித் தண்டனை பெற்றவர்களின் பெயர், முகவரியுடன் அவர்களது புகைப்படத்தையும் இணைய தளத்தில் வெளியிட,மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக இதனை டெல்லியில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை இணைய தளத்திலும் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான விவரங்களை சேகரித்து தருமாறு தேசிய குற்ற ஆவணக் கழகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி. என். சிங் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications