புத்தாண்டு பார்ட்டி: 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்கேற்க கூடாது… சிவசேனா எச்சரிக்கை
புனே: புனே நகரில் நடைபெறும் புத்தாண்டு பார்ட்டிகளில் 18 வயதிற்கும் குறைவானர்கள் பங்கேற்க ஸ்டார் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்களில் அனுமதிக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
புத்தாண்டு பிறப்பை ஒட்டி டிசம்பர் 31ம் நாள் நள்ளிரவு நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டியிருக்கும். இதில் நடிகர் நடிகையர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும், மது விருந்தும் நடைபெறும் இளையதலைமுறையினர் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கானோர் இந்த பார்ட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், புனே நட்சத்திர ஹோட்டல்களில் இந்த வருடம் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்த சிறுவர் சிறுமிகளை புனேயை சுற்றியுள்ள ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அனுமதிக்கக்கூடாது என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டம் எழுந்துள்ளன. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த அறிக்கை ஒன்றை புனே கலெக்டருக்கு சிவசேனா கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அக்கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்களுக்கான அனுமதியை வழங்குகிறபோது அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் சிவசேனா கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications