திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் அடிதடி!
திருச்சி: திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே இன்று அடிதடி நடந்தது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும், திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
''இந்த விவகாரத்தில் அம்மா மாண்புமிகு புரட்சித் தலைவி பெரும் முயற்சி எடுத்து, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தமிழகத்துக்கு காவிரியில் நீர் பெற்றுத் தந்தார். ஆனால், திமுகவோ மத்திய அரசுடன் கைகோத்துக் கொண்டு, தமிழக நலனுக்கு எதிராக வேலை செய்கிறது. எனவே, முதல்வருக்கு இந்த மன்றத்தில் பாராட்டு தெரிவித்தும், திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது'' என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்றத்தில் முன் இருக்கைகளை நோக்கி வந்தனர். அதே போல அதிமுகவினரும் வந்தனர். இரு தரப்பினரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
இதையடுத்து திமுகவினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications