'சத்தியத்திற்காக' தீக்குளித்த பெண் பலி: 5 பேர் உடல் கருகியது
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக தீக்குளித்த பெண் மரணமடைந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற ஐந்து பேரின் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புதிய பூபதி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (62). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி எலிசபெத் (58). இவர்களுக்கு மேரி ஜாக்குலின் (33) என்ற மகளும், சார்லஸ் (32), ஜான்சன் (28), சார்ட்டீஸ் (23) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சார்லசுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் திடீரென்று நின்று போனது. இதற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு புஷ்பாவை சந்தித்த ஜார்ஜ் குடும்பத்தினர், சார்லஸ் திருமணம் நின்று போனதற்கு நீதான் காரணம் என்று புஷ்பாவைக் குற்றம் சாட்டினர். இதற்கு மறுத்த புஷ்பா திருமணம் நிற்பதற்குக் காரணம் நான் காரணம் இல்லை என்று சத்தியம் செய்தார். அதை நிரூபிக்க தீக்குளிக்கிறேன் என்று அழுதபடி வீட்டிற்குள் சென்ற புஷ்பா, அங்கிருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் குடும்பத்தினர் புஷ்பாவை காப்பாற்ற முயற்சித்தனர். புஷ்பாவின் கணவரும், மனைவியை காப்பாற்ற ஓடி வந்தார்.
அதற்குள் வீடும் தீப்பிடித்துக் கொண்டது. காப்பாற்ற முற்பட்ட ஜார்ஜ், அவரது மனைவி எலிசபெத், மகன் ஜான்சன், மகள் மேரி ஜாக்குலின் ஆகிய நான்கு பேர் மீதும் பிடித்துக்கொண்டது. புஷ்பாவின் கணவரும் தீயில் சிக்கிக்கொண்டார்.
இந்த விபத்தில் புஷ்பா உள்பட 6 பேர் உடல் கருகி உயிருக்கு போராடினார்கள். அனைவரும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தீயில் கருகிய புஷ்பா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயத்தோடு ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் கீழ்பாக்கம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications