புத்தாண்டு கொண்டாட்டம்.. மகாபலிபுரத்தில் 'ஆட்டம் போட' போலீஸ் தடை!
மகாபலிபுரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மகாபலிபுரம் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறை டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மகாபலிபுரத்தில் புத்தாண்டை கொண்டாட ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள்.
அவ்வாறு புத்தாண்டு கொண்டாடும் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் ஹோடல்களில்தான் கொண்டாட வேண்டும், கடற்கரைக்கு செல்லக்கூடாது.
புத்தாண்டு தினத்தன்று இரவில் வரும் மோட்டார் சைக்கிள்கள் மகாபலிபுரம் நகருக்குள் நுழைய அனுமதியில்லை.
கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மகாபலிபுரத்தில் புறவழிச் சாலை, ஈ.சி.ஆர்.சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications