டெல்லி: மூடப்பட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் 5 திறப்பு
டெல்லி:பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி போராட்டம் நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் 5 பிற்பகலில் திறக்கப்பட்டன.
இந்தியா கேட் செல்லும் சாலைகள் மற்றும் 10 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. பின்னர் இவற்றில் 5 மெட்ரோ நிலையங்கள் பிற்பகலில் திறக்கப்பட்டன.
ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் டெல்ல்லியை அதிரவைத்தன. இந்த நிலையில் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அந்த மாணவி நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க இந்தியா கேட் செல்லும் சாலைகள் மற்றும் 10 மெட்ரோ ரயில்நிலையங்களும் மூடப்பட்டன.
இந்நிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்தும் டெல்லியில் இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. பார்லிமெண்ட் அருகே ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு பலாத்கார குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 2-வது நாளாக இந்தியா கேட் சாலைகள், 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்தனர்.
பின்னர் பிற்பகலில் 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.
அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications