ஈரான் சிறையில் இருந்து 27 குமரி மீனவர்கள் விடுதலை
குளச்சல்: ஈரான் சிறையில் அடைககப்பட்டிருந்த 27 கன்னியாகுமரி மீனவர்களை அந்நாடு விடுவித்துள்ளது. படகு உரிமையாளர்கள் அபராதம் செலுத்தியதை தொடர்ந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
குமரி மாவட்ட மீனவர்கள் பலர் வெளிநாடுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் கு்ளச்சல், கடியபட்டிணம், சைமன் காலனி, இனயம், இனயம்புத்தன்துறை, இராமன்துறை, பூத்துறை, ஆரோக்கியபுரம் ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த 27 மீனவர்களும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 2 மீனவர்களும் என மொத்தம் 29 மீனவர்கள் கத்தார் நாட்டு கடல் பகுதியில் 6 விசைப்படகுகளில் கடந்த அக்டோபர் 10ம் தேதி மீன்பிடித்தனர். அப்போது ஈரான் நாட்டு எல்லைக்குள் புகுந்ததாக அந்நாட்டு கப்பற்படை அவர்களை கைது செய்தது.
சில நாட்கள் மீனவர்களை கடலில் இரு்ந்த படகுகளிலேயே சிறை வைத்தனர். பின்னர் ஈரான் நாட்டிலுள்ள இக்கட்ஸ் தீவில் உள்ள சிறையில் அடைத்தனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக இவர்கள் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய தூதரக அதிகாரி மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கத்தார் விசைப்படகுகளின் உரிமையாளர்கள் ஒரு படகுக்கு தலா 12 ஆயிரம் ரியால் விதம் 6 படகுகளுக்கு மொத்தம் 72 ஆயிரம் ரியால் அபராதம் செலுத்தினர். (இந்திய பண மதி்ப்பில் ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்). இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் ஈரான் நாடு விடுதலை செய்தது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் அவர்கள் பணிபுரிந்த கத்தார் நிறுவனத்துக்கு வந்த சேர்ந்தனர். இத்தகவலை தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு பொதுசெயலாளர் சர்ச்சில் தெரிவித்தார். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி அவர்களது உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications