தொடரும் பலாத்கார சம்பவங்கள்: வெட்கித் தலைகுனிய வேண்டும் என்கிறார் டாக்டர் ராமதாஸ்
சென்னை: தொடரும் பாலியல் பலாத்கார சம்பவங்களால் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் ஓடும் பேருந்தில் கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், கவலையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நள்ளிரவில் பெண்கள் எந்தவித அச்சமும், பாதிப்புமின்றி சுதந்திரமாக நடமாடும் நிலை என்று ஏற்படுகிறதோ அன்று தான் இந்திய உண்மையான சுதந்திரம் அடைந்ததாக கருதமுடியும் என்று தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் இந்தியா இன்னும் உண்மையான சுதந்திரம் அடையவில்லை என்று தான் கருதவேண்டியிருக்கிறது. இது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.
டெல்லியில் மட்டுமின்றி, தமிழகத்திலும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நேற்று கூட வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இனிவரும் காலத்திலாவது இதுபொன்ற கொடூரங்கள் நிகழாமல் தடுத்து இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத் தருவதும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத்தருவதும் தான் டெல்லி மாணவிக்கும், தமிழகத்தின் புனிதாக்களுக்கும் நம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications