அமெரிக்காவில் சுரங்க ரயிலில் தள்ளி இந்தியர் கொலை- கொலை செய்த பெண் சிக்கினார்!

அமெரிக்க குயின்ஸ் பகுதியில் மூன்று நண்பர்களுடன் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென், அங்கு பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த வியாழன் அன்று குயின்ஸ் சுரங்க ரயிலில் பயணிக்க சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு பெண், அவரை எதிரே வந்த ரயிலில் தள்ளிக்கொன்றார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார்.
ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் அந்த பெண் உருவம் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து வெளியிட்டனர். அந்த பெண் கொலையாளி பற்றி துப்பு கொடுப்பவருக்கு 12,000 டாலர் சன்மான் வழங்கப்படும் என்றும் போலீஸ் அறிவித்திருந்தது.
தற்போது இந்தக் கொடூரக் கொலையை செய்ததாக எரிகா என்ற 31 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 2001-ம் ஆண்டு நியூயார்க் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தமக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனாலே இந்தியரான சுனந்தோ சென்யை ரயிலில் தள்ளிக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்த வழக்கில் குற்றம்நிரூபிக்கப்படும் நிலையில் அந்த பெண்ணுக்கு சுமார் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications