டெல்லி பலாத்கார குற்றவாளி வீடு மீது குண்டு வீச வந்தவர் கைது- இருவர் ஓட்டம்
டெல்லி: டெல்லியில் இளம் பிசியோதெரப்பி மாணவியை ஓடும் பஸ்சில், பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்குக் காரணமானவர்களில் ஒருவரான பஸ் டிரைவர் ராம் சிங்கின் வீடு மீது வெடிகுண்டு வீச வந்தவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து சாலையில் தூக்கி வீசியது. இதில் அந்த மாணவி கடும் காயமடைந்தார்.பெரும் உயிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரது வாழ்க்கை சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் மருத்துவமனையில் முடிந்து போனது.
இந்தக் கொடுமையான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம்சிங் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ராம்சிங்கின் வீடு உள்ள ஆர்.கே.புரம் ரவிதாஸ் குடிசைப் பகுதிக்கு 3 பேர் வந்தனர். அங்கு ராம்சிங்கின் வீடு எங்குள்ளது என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டபோது, நாங்கள் வெடிகுண்டு வீச வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இதையடுத்து 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒரே ஒரு நபர் மட்டும் சிக்கினார். அவரிடமிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications