தமிழக அரசின் ஆலோசகரானார் தேவேந்திரநாத் சாரங்கி

1977-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவேந்திரநாத் சாரங்கி. ராமநாதபுரம், தென் ஆர்க்காடு மாவட்டங்களின் ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர். பின்னர், அரசின் பல்வேறு துறைகளில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் பணியாற்றியவர்.
பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக பணியாற்றிய அவர் கடைசியாக தலைமைச் செயலாளராக பதவி வகித்தார். டிசம்பர் 31ம் தேதி இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். சாரங்கி விடைபெற்றார்.
இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கு தற்காலிக அடிப்படையில், சாரங்கியை அரசின் ஆலோசகராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சாரங்கி சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக அரசின் ஆலோசகராக ஒருவர் பதவியேற்பது தமிழகத்தில் இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது தனது ஆலோசகராக குகனை நியமித்திருந்தார் கருணாநிதி என்பது நினைவிருக்கலாம். அப்போது குகனுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து தரப்பட்டிருந்தது. தற்போது சாரங்கிக்கும் அதே அந்தஸ்தைத்தான் முதல்வர் ஜெயலலிதாவும் வழங்கியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்?












Click it and Unblock the Notifications