ஜெயலலலிதா கொடநாடு பயணம் - ஞானதேசிகன் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 10.45 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவைக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கொடநாடுக்கு சென்றார்.
வருகிற 4-ந்தேதி நீலகிரி மாவட்டம் டெக்காட்டில் குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் பொன்விழா நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து மேலும்சில நாட்கள் அங்கேயே அவர் பொங்கல்வரை தங்கியிருக்க திட்டமிட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன், ஜெயலலிதாவின் கொடநாடு பயணத்தால் அரசுக்குத்தான் வீண் செலவு என்றும் அதற்கு அவர் பேசாமல் சென்னையிலே தங்கி அரசுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications