வட கிழக்குப் பருவ மழை முடிந்தது .. குளிர்கால மழைக்கு ஜன. 3 முதல் வாய்ப்பு
சென்னை: வட கிழக்குப் பருவ மழை முடிந்து போய் விட்டது. இனிமேல் மழை பெய்தால் அது குளிர்கால மழை என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் ஜனவரி 3ம் தேதி முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,
வங்கக்கடலில் இலங்கை தொடங்கி தமிழகம், ஆந்திரா ஒட்டியுள்ள பகுதியில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது குமரி கடலில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சிவகங்கையில் 2 செ.மீ. மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, காவிரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கின்றன.
இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது மேற்கு திசை நோக்கி நகருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, தென்கடலோர மாவட்டங்களில் 3-ந் தேதி முதல் தொடர்மழை பெய்யும்.

வட கிழக்குப் பருவ மழை முடிந்தது
வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரையில், அதன் காலம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை ஆகும். அந்த வகையில், வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இனி பெய்யும் மழை குளிர்கால மழை என்று அழைக்கப்படும்.

பற்றாக்குறை மழைதான்
வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு 44 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு இயல்பான அளவை காட்டிலும் குறைந்த அளவே அதாவது 37 செ.மீ. தான் பெய்துள்ளது. 16 சதவீதம் அளவுக்கு மழை குறைவாக பெய்து இருக்கிறது.

சில மாவட்டங்களில் கூடுதல் மழை
இயல்பான மழை அளவுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சில மாவட்டங்கள் கூடுதலான மழையைப் பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் 4 சதவீதமும், திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகியவை தலா 10 சதவீதமும், வேலூர் 8 சதவீதமும், விழுப்புரம் 4 சதவீதமும் கூடுதல் மழையை பெற்று இருக்கின்றன.

மதுரை- சென்னையில் குறைவு
பல மாவட்டங்களில் மழையின் அளவு கணிசமான அளவு குறைந்து இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 48 சதவீதமும், அரியலூரில் 43 சதவீதமும், திருப்பூரில் 38 சதவீதமும், பெரம்பலூரில் 39 சதவீதமும், புதுக்கோட்டையில் 29 சதவீதமும், புதுச்சேரியில் 26 சதவீதமும், திருச்சியில் 25 சதவீதமும், ராமநாதபுரத்தில் 22 சதவீதமும், நாமக்கலில் 25 சதவீதமும், கரூரில் 24 சதவீதமும், காஞ்சீபுரத்திலும், சென்னையிலும் 26 சதவீதமும் மழை குறைவாக பெய்துள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications