வெளி மாநிலங்களிலி்ருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குகிறது தமிழகம்

தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது 4000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. சென்னையை தவிர இதர மாவட்டங்களில் குறைந்தது 12 மணி நேரம் மற்றும் அதற்கு மேல் மின்வெட்டு நிலவுகிறது.
புதிய மின் திட்டங்களால் இன்னும் கைக்கு மின்சாரம் வராத நிலையே காணப்படுகிறது. எனவே பற்றாக்குறை குறைந்தபாடில்லை. எனவே நிலைமையை சமாளிக்கும் வகையில் வெளிமாநிலங்களிலிருந்தும், தனியார்களிடமிருந்தும் மின்சாரம் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் மனு கொடுத்திருந்தது. அதில், தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகிற ஜூன் மாதம் முதல் 2014 மே மாதம் வரையிலான கால கட்டத்தில் 1000 மெகா வாட் மின்சாரம் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளி மாநிலத்தில் இருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.5 என்ற வீதத்தில் மின்சாரம் வாங்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் எவ்வளவு மெகாவாட் மின்சாரம் வாங்குவது என்பது மத்திய மின் பாதையில் உள்ள இடத்தை பொறுத்து ஒழுங்கு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications