வறண்டு கிடக்கும் தஞ்சையில் ஜெ.வை வாழ்த்தி விளம்பரம்: சர்ச்சையில் தஞ்சை விவசாய சங்க தலைவர்
தஞ்சை: பிரபல நாளிதழ் ஒன்றில் வெளிவந்த விளம்பரம் தஞ்சை விவசாய சங்க தலைவர் கக்கரை சுகுமாரனை ஒரு வழிபடுத்திவிட்டது.
தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடாததால் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் போன்றவைகள் கடும் வறட்சிக்கு உள்ளாகியுள்ளது.
மேலும் விவசாயம் பொய்த்துப் போனதால் பல விவசாயிகள் தற்கொலையும் செய்து கொண்ட கொடுமையும் நடைபெற்றது. இதனால் டெல்டா மாவட்டங்களில் வாழும் விவசாயிகள் ஆளுங் கட்சி மீது கோபமாக உள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி தஞ்சை விவசாய சங்க தலைவர் கக்கரை சுகுமாரன் பெயரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வந்தது.
மேலும் 'காவிரி நீருக்காக சட்டப்போர் நடத்தி, வென்று மத்திய அரசிதழில் இடம்பிடித்த அம்மாவுக்கு நன்றி', 'காவிரியை மீட்ட அம்மாவுக்கு நன்றி!', 'பயிர் காத்து படுகை விவசாயிகளின் உயிர் காத்து தலைக்காவிரியை தமிழகம் மீட்டுவரும் காவிரித் தாயே!' என்று பாராட்டி காவிரிப் படுகை முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த விளம்பரத்தையும் போஸ்டர்களையும் பார்த்த விவசாய சங்க நிர்வாகிகள் கடுப்பாகி இது குறித்து சுகுமாரனை ஒரு பிடிபிடிக்க மனிதர் அரண்டு போய்விட்டார்.
இந்த விளம்பரங்களை எனக்கே தெரியாமல் யாரோ செய்கின்றனர் என கூறும் அவர் கைகாட்டுவது ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரை. ஆனால் அமைச்சரோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகின்றார்.
மக்கள் கடும் விரக்தியில் உள்ள நேரத்தில் இந்த விளம்பரங்கள்... இது தேவையா?''
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications