புத்தாண்டில் விடுதலையை நிலை நாட்டுவோம், எதிர்ப்பை கொண்டாடுவோம்: உதயகுமார்

இடிந்தகரையில் கடந்த 31ம் தேதி நடந்த புத்தாண்டு விழாவுக்கு அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது,
.
2012ம் ஆண்டு முடிவுறும் தருவாயில் சுதந்திரம், மனிதநேயம், எதிர்ப்புணர்வு ஆகியவற்றால் தன் சந்ததியினரை பாதிக்கின்ற அரசு முடிவுகளை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களுக்கு எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகின்றதோ அப்போது வீறுகொண்டு எழுந்து விடுதலையை நிலைநாட்ட வேண்டும். எனவே வரும் புத்தாண்டில் விடுதலையை நிலை நாட்டுவோம். எதிர்ப்பை கொண்டாடுவோம் என்றார்.
விழாவில் ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் 200 பேர் மற்றும் இடிந்தகரை, கூடங்குளம், வைராவிகி்ணறு, கூட்டப்புளி, பெருமணல் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வாடி ஆன்ட் லோன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒடிசாவின் பராம்பரிய இசைமெட்டை வாசி்த்து அனைவரையும் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பினைச் சேர்ந்த பீட்டர் பேசியதாவது, இந்தியாவில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் காவல் துறையினராலும், ராணுவத்தினராலும், சிறப்பு அதிரடிப்படையினராலும் நிரந்தர முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். உள்நாட்டு எதிர்ப்புணர்வை ஒடுக்குவதற்காக போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதே போன்று இடிந்தகரையிலும் தங்கள் வாழ்வாதரங்களுக்காக போராடும் மக்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து வழக்குகள் போடுவது வேதனைக்குரியது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications