டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு- 1000 பக்க குற்றப்பத்திரிக்கை 'பென் டிரைவ்' மூலம் தாக்கல்
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். பென் டிரைவ் மூலம் இதை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். அதன் பின்னர் இந்த வழக்கு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையும் உடனடியாகத் தொடங்கும்.
குற்றப்பத்திரிக்கையை பென்டிரைவில் டெல்லி போலீஸார் தாக்கல் செய்கின்றனர். தகவல்கள் வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்படி பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தயாரித்துள்ளதாக தெரிகிறது.
இன்று சகேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கை ஆவண வடிவிலும் தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மாஜிஸ்திரேட் இந்த வழக்கை நேற்று புதிதாகத் தொடங்கப்பட்ட விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுவார். அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடங்கும்.
விரைவு நீதிமன்றத்தில் ஒரே மாதத்தில் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிக்கை மொத்தம் 1000 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் நடந்த சம்பவம் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரின் விரிவான வாக்குமூலங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. 40 அரசுத் தரப்பு சாட்சியங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
6 பேர் மீதும் கொள்ளை, கும்பலாக கற்பழித்தது, கொலை, சாட்சியத்தை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மரண தணட்னை தருமாறும் போலீஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications