ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்டு இறந்த மாணவிக்கு அசோக சக்ரா வழங்க பாஜக கோரிக்கை
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்டு இறந்த மருத்துவ படிப்பு மாணவியின் வீரத்தை பாராட்டும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா வழங்க வேண்டும் என்று பாஜகவின் டெல்லி பிரிவு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விஜேந்தர் குப்தா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தன்னம்பிக்கை மற்றும் வீரம் இந்த நாட்டையே ஆச்சரியப்பட வைத்தது. எனவே, அவரின் வீரத்தை பாராட்டும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை குடியரசு தினத்தன்று வழங்கி கௌரவிக்க வேண்டும்.
நீரஜா பனோட்டுக்கு வழங்கியது போன்று டெல்லி மாணவிக்கும் அசோக சக்ரா விருது வழங்க வேண்டும். அம்மாணவியின் உடல் சிங்கப்பூரில் இருந்து வந்தபோது அங்கு இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அவருக்கு அசோக சக்ரா விருது வழங்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் உணர்வை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பான் ஆம் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த நீரஜா பனோட் அந்நிறுவனத்தின் விமானம் கடத்தப்பட்டபோது தீவிரவாதிகளிடம் இருந்து பயணிகளை காப்பாற்றும்போது கடந்த 1986ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி இறந்தார். அவருக்கு அப்போது 23 வயது தான். அவரது தீரத்தை பாராட்டி அவர் மறைவுக்கு பிறகு அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. மிக குறைந்த வயதில் அசோக சக்ரா விருது பெற்றது நீரஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications