அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு வெளியிடுவதில் தாமதமாவது ஏன்?
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை டிசம்பர் மாதத்துக்குள் வெளியிடப் போவதாக மத்திய அரசு அறிவித்தும் இன்னமும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது இறுதி தீர்ப்பை வெளியிட்டது நடுவர் மன்றம். காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிட்ட நடுவர் மன்றம், அதில் தமிழ்நாட்டின் பங்காக 419 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு அரசிதழில் வெளியானால்தான் அடுத்த 90 நாட்களுக்குள் தீர்ப்பு அமலுக்கு வரும் என்பது சட்டம்.
ஆனால், தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகள் ஆன பிறகும், இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் 7-ந் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், நடுவர் மன்ற தீர்ப்பை டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் தலைவரான நீர்வள அமைச்சக செயலாளர் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஆனால், டிசம்பர் மாதம் முடிந்த பிறகும், நடுவர் மன்ற தீர்ப்பு, இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்குகளில் முடிவு காணப்படும்வரை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று ஒருதரப்பு கருத்து தெரிவித்துள்ளனர். இதனால்தான் மத்திய சட்ட அமைச்சகம் இறுதி முடிவு எடுக்க இயலாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications