Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாதிக்கொரு காடுவெட்டி உருவாக வேண்டும்.. ராமதாஸ் கூட்டத்தி்ல பயங்கர பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர் ராமதாஸ் தற்போது ஜாதிக்காக படு தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார். அவரது தலைமையில் ஏகப்பட்ட ஜாதிச் சங்கங்கள் இணைந்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இவர்களின் கூட்டம் ஆங்காங்கு தற்போது நடந்து வருகிறது. டிசம்பர் 27ம் தேதி சேலத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ் மற்றும் 40 ஜாதிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரும் பேசிய பேச்சு பயங்கரமாக இருந்தது...

நரிக்குறவர்கள் சுடுவார்கள்...

நரிக்குறவர்கள் சுடுவார்கள்...

டாக்டர் ராமதாஸ் பேசுகையில், தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு குறவர் இனப் பெண்கள் மீது காதல் ஏற்படுவது இல்லை. அப்படி காதல் ஏற்பட்டு அந்த இனப் பெண்ணைத் தூக்கிச் சென்றால், அவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். துப்பாக்கியை எடுத்து டுமீல் என சுட்டுவிடுவார்கள். அதனால்தான் நரிக்குறவர்களைப் பார்த்தால், அவர்களுக்குப் பயம். நாம் நடத்தப்போகும் அடுத்த கூட்டத்துக்கு நரிக்குறவர்களையும் அழைத்து வருவோம்.

ஜாதிக்கொரு காடுவெட்டி..

ஜாதிக்கொரு காடுவெட்டி..

யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த நரேஷ் யாதவ் என்பவர் பேசுகையில், நம்மைப் பார்த்து அவர்கள் பயந்த காலம் போய்விட்டது. நாம் அவர்களைப் பார்த்து பயந்துகொண்டு இருக்கிறோம். எனக்குத் தெரிஞ்சு காடுவெட்டி குருவைப் பார்த்தால் மட்டும்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால், ஒவ்வொரு சாதியிலும் காடுவெட்டி குருவைப் போல ஒரு ஆள் உருவாக வேண்டும் என்றார்.

கட்டுப்பாடு அதிகம்

கட்டுப்பாடு அதிகம்

தொட்டி நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பேசுகையில், தமிழகத்திலேயே எங்க சாதியில்தான் அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மதுரை வீரன் எங்க சாதிப் பெண் பொம்மியைத் தூக்கிட்டுப் போயிடுவான். அதை அவர்கள் விழாவாகக் கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க சாதிப் பெண்கள் வேறு சாதிக்காரனோடு போயிடுச்சுன்னா, செத்துப்போனவங்களுக்கு சுடுகாட்டில் எப்படிச் சடங்குகள் செய்வாங்களோ, அப்படிப்பட்ட சடங்குகளைச் செஞ்சுடுவோம். மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டோம். இந்தக் கட்டுப்பாடு இன்றுவரை இருக்கிறது. இதை யார் மீறவும் நாங்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஜாதி இல்லாட்டி அண்ணன் தம்பியே கிடையாதே..முருகன்ஜி

ஜாதி இல்லாட்டி அண்ணன் தம்பியே கிடையாதே..முருகன்ஜி

தேவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் முருகன்ஜி பேசுகையில், கலப்பினம் உருவாக்க நினைக்கிறார்கள். நாம் அகில இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்த வேண்டும். பெரியார், ஜனநாயகம், கம்யூனிஸ்ட் என்று சொல்லி சாதியை அழிக்கப் பார்க்கிறார்கள். அட சண்டாளர்களே... சாதி இல்லை என்றால் அண்ணன், தம்பி உறவே இருக்காதுடா. ஜனவரி 24-ம் தேதி தென் மாவட்டங்கள் முழுவதும் களத்தில் இறங்கிப் போராடுவோம் என்றார்.

மணப்பாறையில் மாமன் மகள்.. பி.டி. அரசகுமார் பேச்சு

மணப்பாறையில் மாமன் மகள்.. பி.டி. அரசகுமார் பேச்சு

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான பி.டி. அரசகுமார் பேசுகையில், மணப்பாறையில் என் மாமன் மகளை, வேறு ஒரு சாதிக்காரன் இழுத்துட்டுப் போய் மிளகுப்பாறையில் பதுக்கி வச்சிருந்தான். அன்னைக்குப் பார்த்து நான் வீட்ல இல்ல. எங்க அண்ணனும் மாமாவும் மிளகுப்பாறைக்குப் போனாங்க. அதுக்குள்ள அந்தப் புள்ளைக்குத் தாலி கட்டிட்டான். எங்க அண்ணன் அந்தப் புள்ளைகிட்ட, இனி நீ மாட்டுக் கறிதான் சாப்பிடணும். தப்பு அடிக்கணும்னு சொல்லியிருக்கார். அந்தப் புள்ளையும், எதுவா இருந்தாலும் நான் அவர் கூடத்தான் போவேன்னு சொல்லிடுச்சு. சரி, போலீஸ் ஸ்டேஷன்ல மாலையை மாத்திக்கோங்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்தார். அதுக்குள்ள எங்க ஊரு ஆளுங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னார். ஊர்க்காரங்க கத்தி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு ஸ்டேஷனுக்குப் போயிருக்காங்க. பெண்ணைக் கூட்டிட்டு வந்ததும், ஸ்டேஷனுக்கு வெளியே வெச்சு அந்தப் பையனை ஒரே போடாப் போட்டு கதையை முடிச்சுட்டு, பெண்ணைக் கூட்டிட்டு வந்து எங்க ஆளு ஒருத்தனுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். வீரம்னா அப்படி இருக்கணும்.

ஓநாய்களிடமிருந்து... ராமதாஸ் மறுபடியும் பேச்சு

ஓநாய்களிடமிருந்து... ராமதாஸ் மறுபடியும் பேச்சு

கடைசியாக மீண்டும் ராமதாஸ் பேசினார். அவர் சொல்கையில், ஓநாய்களிடம் இருந்து நம் பெண் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது. வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளிடம், குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களிடம், வெளியில் பதுங்கி இருக்கும் ஓநாய்களைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு சாதி அமைப்பும் உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனவரி 24-ம் தேதி தமிழகம் முழுவதும் பெரிய அளவில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருக்கும் நம் போராட்டத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கிடைத்து விடும். இல்லை என்றாலும் நீதிமன்றத்தை நாடியாவது அனுமதி வாங்கி விடுவோம். இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு நான் கடைசி வரை உறுதுணையாக இருப்பேன் என்றார் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+