புதுவை பலாத்கார சம்பவம்: பாதிக்கப்பட்ட மாணவி 10-ம் வகுப்பில் 480 மார்க் எடுத்தவர்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான மாணவி 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவருக்கு ஏற்பட்ட இந்தக் கதியால் அம்மாணவி பிளஸ் டூ தேர்வு எப்படி எழுதப் போகிறாரோ என்றும் அவரது தந்தை நாகராஜ் குமுறியுள்ளார்.
தமது மகளுக்கு நேர்ந்த நிலைமையை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்ய முன்ற தந்தை நாகராஜ் கூறுகையில், எனது மகள் நன்றாக படிக்கக் கூடியவள். 10-ம் வகுப்பில் 480 மதிப்பெண் எடுத்திருந்தார். அவளை மருத்துவம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நேற்று முன் தினம் வெளியே சென்றவள் இரவு வரை வீடு திரும்பாததால் போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று காலை எனது மகள் விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து ஒரு ரூபாய் காயின் போன் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினாள். பேருந்து நிலையத்தில் மயங்கிய நிலையில் இருக்கிறேன் உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள். நாங்கள் அங்கு சென்று அழைத்து வந்தோம்.
என் மகளுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வருகின்றனர். என்னையும் என் மனைவியையும் மகள் சிகிச்சை பெறும் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. என் மகளுக்கு பலாத்காரம் நடக்காதது போலவும் இவளே தானாக அந்த இளைஞர்களை சென்று சந்தித்தது போலவும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இதற்காக கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க முயற்சி நடக்கிறது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். என் மகளை பலாத்காரம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications