இது இப்ப.. ஷெட்டர் அரசை கவிழ்க்கமாட்டேன்- புது கெடு விதித்த எதியூரப்பா!

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் பாரதிய ஜனதா அரசை பட்ஜெட் தாக்கல் செய்ய விட மாட்டோம். ஜெகதீஷ் ஷெட்டர் அரசை கவிழ்ப்பது பற்றி இன்று நடைபெறும் கர்நாடக ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதனால் அதற்கு இடம் கொடுக்க முடியாது என்று சவடால் விட்டிருந்தார
இந்த சவடாலைத் தொடர்ந்து இன்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எதியூரப்பா தமக்கு ஆதரவாக 50-60 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்று கூறி வருகிறார். ஆனால் இன்றைய கூட்டத்தில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள்தான் கலந்து கொண்டனர். இதனால்தான் என்னவோ கடுப்பாகிப் போன எதியூரப்பா மீண்டும் ஒரு புதிய கெடு, பழைய நிபந்தனைகள் என முருங்கை மரம் ஏறியிருக்கிறார்.,
தம்மை ஆதரிக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, தமது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னெடுத்த நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது என்பதுதான் பாஜகவுக்கு கர்நாடகா ஜனதா தளத்தின் தலைவர் எதியூரப்பா வைத்திருக்கும் நிபந்தனை. இந்த நிபந்தனைக்கான காலக்கெடு ஜனவரி 15. அதாவது பாஜக ஒழுங்காக நடந்து கொள்கிறதா என ஜனவரி 15-ந் தேதி வரை பார்க்கப் போகிறாராம் எதியூரப்பா.
மேலும் பட்ஜெட்டையே தாக்கல் செய்யவிடமாட்டேன் என்ற சபதத்தைக் கைவிட்டுவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரின் ஆட்சிக் காலம் முழுவதும் தொந்தரவே செய்யமாட்டோம் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
அப்ப ஜனவரி 15-ந் தேதிக்குப் பிறகு இன்னொரு கெடு உண்டோ?
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications