'கலர்புல்' கும்பமேளா... பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கும் அலகாபாத்
அலகாபாத்: உலகிலேயே மிகப் பெரிய ஆன்மீக விழா என்று வர்ணிக்கப்படும் கும்பமேளா அலகாபாத்தில் களை கட்டியுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சாதுக்கள் குவிந்து வருகின்றனர். வெளிநாட்டுப் பயணிகளும் பெரும் திரளாக வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தி, மத பாரம்பரியம் என்று பல்வேறு விதமான கலவைகளுடன் கூடிய கும்பமேளா அலகாபாத்தில் களை கட்டியுள்ளது. திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா நடக்கிறது.
நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் சாதுக்களும், பக்தர்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அலகாபாத் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கும்பமேளா நடைபெறுகிறது. இதுதான் உலகிலேயே அதிக அளவிலான பக்தர்களை ஈர்க்கும் மத விழாவாகும்.

10 கோடி பக்தர்கள்
அலகாபாத் கும்பமேளாவுக்கு கிட்டத்தட்ட 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கேற்ற வகையில் விரிவான பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாகா சாதுக்கள்
பிரபலமான நாகா சாதுக்கள் உள்பட பல்வேறு வகையான சாதுக்களை கும்பமேளாவில் பார்க்க முடியும். இந்தியாவின் விதம் விதமான சாதுக்கள் கூட்டத்தையும் இங்கு ஒருசேர பார்க்கலாம். வெளிநாட்டுப் பயணிகளும் ஏராளமான பேர் வருவார்கள்.

ஜனவரி 14ல் மகர சங்கராந்தி
கும்பமேளாளவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஜனவரி 14ம் தேதி நடைபெறும் மகர சங்கராந்தி விழா. அன்றைய தினம் கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் புனித நீராடுவது வழக்கம். கும்பமேளாவையொட்டி அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.

ஜனவரி 27 பவுஸ் பூர்ணிமா
பெளர்ணமி தினமான ஜனவரி 27ம் தேதியன்று சாதுக்களும், லட்சக்கணக்கான பயணிகளும் புனித நீராடுவர்.

மெளனி அமாவாசை ஸ்னான்
பிப்ரவரி 10ம் தேதி, மெளனி அமாவாசை ஸ்னான் எனப்படும் புனித நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதிலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு
அலகாதாபாத் கும்பமேளா குறித்த மேலும் விவரங்கள் தெரிய வேண்டுவோர், கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications