டெல்லி மாணவியை மிகக் கொடூரமாக சீரழித்தது மைனர் சிறுவன் தான்- பரபரப்புத் தகவல்கள்!
டெல்லி: டெல்லியில் பிசியோதெரப்பி மாணவியை ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரில் 17 வயதான சிறுவன்தான் மிகவும் மோசமான முறையில் சீரழித்துள்ளான், சித்திரவதை செய்துள்ளான், தாக்கியுள்ளான் என்று போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவனது செயல்களால்தான் அந்த மாணவி மிகக் கடுமையான பாதிப்பை சந்தித்து மரணம் வரை போய் விட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் ஓடும் பஸ்சில் டிசம்பர் 16ம் தேதி நடந்த பாலியல் பலாத்காரச் செயல் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பஸ் டிரைவர் ராம்சிங் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவனுக்கு வயது 17. இதனால் இவனை தனியாகப் பிரித்து இவன் மீது சிறார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளனர். சிறுவனாக இருந்தாலும் இவன்தான் அந்தப் பெண்ணை மிக மோசமான முறையில் தாக்கி, சீரழித்துள்ளான் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

அட்டூழியத்தை ஆரம்பித்து வைத்தான்
டிசம்பர் 16ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள முனிர்கா பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்து நின்றது. மாணவி, தனது நண்பருடன் ஏறினார். பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில் அந்த சிறுவன், மாணவியை சீண்டி கிண்டல் செய்துள்ளான்.

இரும்புக் கம்பியால் தாக்கிய டிரைவர்
சிறுவன் கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டுள்ளார் மாணவியுடன் வந்த நண்பர். இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் ராம்சிங் பெரிய இரும்புக் கம்பியை எடுத்து வந்து அவரை தாக்கினார். தடுக்க முயன்ற மாணவிக்கும் அடி விழுந்தது.

முதலில் பலாத்காரம் செய்தது டிரைவர்
இதனால் கோபமடைந்த மாணவி, டிரைவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்சிங், மாணவியிடம் உனக்குப் பாடம் கற்பிக்கிறேன் பார் என்று கூறி மாணவியை தரதரவென இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுவனிடம் சிக்கிய மாணவி
ராம்சிங்கிடம் சிக்கி சீரழிந்து போன மாணவியை அடுத்து இந்த சிறுவன் பலாத்காரம் செய்துள்ளான். மிகவும் மோசமான முறையில் அப்போது அவன் நடந்து கொண்டதாக மாணவியும், மாணவியுடன் வந்த நண்பரும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அரை மணி நேரம் அநியாயம்
கிட்டத்தட்ட அரை மணி நேரம் இப்படி அடுத்தடுத்து அந்த ஆறு மிருகங்களும் அப்பெண்ணின் வாழ்க்கையைச் சூறையாடின. இதனால் அப்பெண் மயங்கி விழுந்தார்.

மயக்கத்திலும் விடாத சிறுவனின் வெறித்தனம்
மாணவி மயங்கிய நிலையிலும் அந்த சிறுவன் விடவில்லை. தொடர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டு அப்பெண்ணின் உடல் உறுப்புகள் சேதமடையும் அளவுக்கு கொடூரமாக நடந்து கொண்டுள்ளான். இவன் நடந்து கொண்ட விதத்தாலும், இரும்புக் கம்பியால் தாக்கியதாலும்தான் மாணவியின் வயிற்றிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

தப்ப விடக் கூடாது - பொதுமக்கள் கோரி்க்கை
இவ்வளவு கொடுமைகளையும் செய்த இவனை சிறுவன் என்பதற்காக விட்டு விடக் கூடாது. இவனுக்கும் மரண தண்டனை கிடைக்கும் வகையில் போலீஸார் திறமையாக செயல்பட்டு வழக்கை டைட்டாக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரி வருகின்றனர்.
இருப்பினும் இவனிடம் நடத்தப்பட்டுள்ள டிஎன்ஏ சோதனையின் முடிவில்தான் இவனை சிறார் கோர்ட்டில் விசாரிப்பதா அல்லது ரெகுலர் கோர்ட்டில் மற்றவர்களுடன் சேர்த்து விசாரிப்பதா என்ற முடிவுக்கு போலீஸாரால் வர முடியும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications