எம்.எல்.ஏ. பதவியே போதும்... : 'அடாவடி' குஜ்ராத் எம்.பி. ரடாடியா அதிரடி முடிவு!
போர்பந்தர்: அரசியல்வாதிகள் எம்.எல்.ஏ.வாகி எம்.பி.யாகி அப்படியே.. மத்திய அமைச்சராகி... என்றுதான் கணக்குப் போட்டு கனவு காண்பர். ஆனால் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.பி.யோ எம்.எல்.ஏ.பதவியே போதும் என்று அடம்பிடித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் சுங்கச்சாவடியில் துப்பாக்கியைக் காட்டி ஊழியர்களை மிரட்டிய சர்ச்சையில் சிக்கியவர் காங்கிரஸ் எம்.பி.யான ரடாடியா. அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது. ரடாடியாவும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார்.
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. எஅன இரண்டு பதவிகளை வைத்திருக்கும் ரடாடியா ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் மனிதர் இன்று தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எம்.எல்.ஏ.வாக இருப்பதால், இங்கேயே தங்கி மக்களுக்காக பணியாற்ற முடிவு செய்திருக்கிறேன். எனவே, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல் குன்வார்ஜி பவாலியா என்ற எம்.பி.யும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications