எல்லையைத் தாண்டும் பெண்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும்: பாஜக அமைச்சர்

மத்திய பிரதேச மாநில கேபினட் அமைச்சராக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா. அவர் ஒரு கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதவாது பெண்கள் எல்லையைத் தாண்டினால் அதற்கான விலையை கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனது கருத்துக்கு பலமாக ராமாயணத்தில் இருந்து சில வரிகளை வேறு குறிப்பிட்டுள்ளார். அதாவது சீதை லக்ஷ்மணன் போட்ட கோட்டைத் தாண்டியதால் தான் ராவணனால் கடத்திச் செல்லப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். எல்லையைத் தாண்டும் பெண்களுக்கு தக்க தண்டனை தேவை தான் என்று கைலாஷ் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அவர்களாக வரவழைத்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கருத்துகளை அரசியல் தலைவர்கள் தெரிவிப்பது ஒன்றும் இது முதல் முறையன்று. மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய பெண் விஞ்ஞானி ஒருவர் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் ஊற்றி சுற்றினால் கற்பழிக்கத் தான் செய்வார்கள் என்று கூறி அதிர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு குறித்து கேட்டதற்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், இது எனக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்யும் சதி என்றார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications