சொத்துக் குவிப்பு வழக்கு: துரைமுருகனின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்

துரைமுருகன் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது சொந்த ஊரான காட்பாடியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழி்பபு போலீசார் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இது குறித்து விளக்கம் கேட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி அவருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், எனது மனைவி சாந்தகுமாரிக்கு வருமானம் உள்ளது. அவர் தனியாக வருமான வரி செலுத்துகிறார். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது மனைவி குறித்த சொத்து கணக்கையும் ஒன்றாக கருதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது தவறு. இதனை கவனிக்க தனி நீதிபதி தவறிவிட்டார். எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவு சரியானது தான் என்றும், அதில் தலையிட தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறி நீதிபதிகள் துரைமுருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications