அறுக்க முயன்று, கைவிடப்பட்டு மறுபடியும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா வளைவு திறப்பு!
சென்னை: மறைந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்ட அண்ணா வளைவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த 1985-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது பிரமாண்ட அண்ணா வளைவு. அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அண்ணா வளைவை இடிக்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் அண்ணா வளைவை இடிக்கும் பணிகள் தொடங்கின. வளைவை இடிக்க முடியாது என்பதால் அதை அப்படியே அறுத்து தூக்கி எடுக்க முடிவு செய்து வேலைகளில் இறங்கினர். ஆனால் வேலை தொடங்கிய பின்னர்தான் தெரிந்தது, வளைவை அறுப்பது மிகவும் கடினம் என்று.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா வளைவை நேரில் வந்து பார்த்தார். பின்னர் அதை அகற்றும் பணிக்குத் தடை விதித்தார். வளைவை அகற்றாமல் பாலம் கட்டுமாறும் உத்தரவிட்டார்.
மேலும் பாதி அறுபட்ட வளைவை சரி செய்ய, ரூ. 67 லட்சம் ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார். இதையடுத்து அறுக்கப்பட்ட வளைவை சரி செய்யும் பணிகள் தொடங்கின.இந்தப் பணிகள் முடிவடைந்தைத் தொடர்ந்து இன்று காலை அதை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாமுவேல் எபநேசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications