பிளஸ் டூ மாணவி பலாத்காரம்- கொந்தளித்த புதுவை! 2வது நாளாக போராட்டம் தீவிரம்!

புதுச்சேரி அருகே பிளஸ் டூ மாணவியை பேருந்து நடத்துனரும் அவரது நண்பர் ஒருவரும் சீரழித்த சம்பவம் கடந்த 2 நாட்களாக அந்த மாநிலத்தை உலுக்கி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரி நேற்று 10 இடங்களில் தொடர் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. தமது மகளை பார்க்க அனுமதிக்காததால் மாணவியின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்சிகள் போராட்டம்
இதைத் தொடர்ந்து இன்றும் மாணவிக்கு நீதி கோரி பல இடங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இன்றைய போராட்டத்தில் திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. நடேசன் நகரில் உள்ள மகளிர் ஆணையத்தை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாணவர்கள் போராட்டம்
மேலும் சட்டக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அலுவலகத்தின் கதவினைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய அவர்கள் முயன்றனர். அப்போது, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் அதனைத் தடுத்தனர். இதனால், போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பல இடங்களில் போராட்டம் நடந்ததால் இன்றும் புதுவையில் கொந்தளிப்பு நீடித்து வருகிறது. இதனால் மாணவி சிகிச்சை பெறும் மருத்துவமனை, ஐ.ஜி. அலுவலகம், சட்டசபை, ஆட்சியர் அலுவலகம், ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸ் அலட்சியம் தொடர்பாக விசாரணை
இதேபோல் மாணவி காணாமல் போனது பற்றிய புகாரை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்தது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. சுக்லா நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார். வழக்கு பதிவு செய்ய தாமதமானதற்கு காரணமாக இருந்ததவர்கள் யார்? அலட்சியப்படுத்தியவர்கள் யார்? என்று விசாரணை நடக்கிறது. திருபுவனை சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சிலர்தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. எனவே அவர்களை சஸ்பெண்டு செய்ய முடிவு செய்துள்ளனர்.
சப்- இன்ஸ்பெக்டருக்கு குட்டு
இந்த நிலையில் புதுவை தலைமை நீதிபதி முருகன் வில்லியனூர் மகளிர் போலீஸ் அதிகாரி கிருஷ்ணவேணியை நீதிமன்றத்துக்கு அழைத்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை ஏன் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பி அவரை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications