தேனி கோர்ட்டுக்கு விஜயகாந்த் போகத் தேவையில்லை - உயர்நீதி்மன்றம் அனுமதி
சென்னை: தமிழக அரசின் அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தேனியில் தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறு செய்யும் விதத்தில் பேசியதாகக் கூறி தேனி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 4-ம் தேதி அதாவது இன்று விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications