சொந்தக் கட்சி தொடங்கினார் பி.ஏ.சங்மா! பாஜக கூட்டணியில் ஐக்கியம்!

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பி.ஏ.சங்மா, சோனியாவின் தலைமையை எதிர்த்தார். பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அதன் பின்னர் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவர் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகினார்.
தற்போது தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை இன்று முறைப்படி தொடங்கியிருக்கிறார். இக்கட்சிக்கு புத்தகம் சின்னமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறோம் என்றும் சங்மா கூறியுள்ளார்.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சங்மாவின் மகள் அகதா, அடுத்த லோக்சபா தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்றும் அறிவித்திருக்கிறார் அவர். ம்ணிப்பூர் மாநில சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலும் ரெடியாக இருக்கிறது என்று அதிரடியை வீசியிருக்கிறார் சங்மா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications