சிங்கப்பூரில் புத்தாண்டு உற்சாகம்- சக தமிழரைக் கொலை செய்த 4 தமிழர் கைது!
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது போதையில் சக தமிழரைக் கொலை செய்ததாக 4 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர்களான ராமசாமி ராபின்ஹூட், போஸ் முருகானந்தம், ராஜா அருள், பழனிசாமி விஜயகுமார் ஆகிய நான்கு பேர் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டைக் கொண்டாட ஜரோங் லேக் பார்க் பகுதியில் மது அருந்தியுள்ளனர். அங்கு வேறு சிலரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நால்வரும் பூபாலன் பழனிகுமார் என்ற தமிழர் உள்பட சிலரைத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமுற்ற பூபாலன் பழனிகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 4 தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications