சென்னை சிங்கள புத்த மடத்தில் காஷ்மீர் துறவி தற்கொலை!
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள இலங்கையர்களால் நடத்தப்படும் மகாபோதி சொசைட்டி என்ற பெயரிலான புத்த மடத்தில் ஒரு இளம் துறவி தற்கொலை செய்து கொண்டார். தனது இடுப்பு நாடாவால் அவர் தூக்கிட்டு மாண்டுள்ளார்.
எழும்பூர் ரயில் நிலையம் எதிரே கென்னத் லேன் தெருவில் மகாபோதி சொசைட்டி உள்ளது. சிங்கள பெளத்தர்களால் நடத்தப்படும் மடம் இது. இங்கு இலங்கையிலிருந்து வரும் சிங்கள பெளத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் வருகை தருவர். மேலும் இங்கு ஏராளமான அறைகளைக் கட்டி வைத்துள்ளனர். அங்கு துறவிகளும் தங்கியுள்ளனர்.
இங்கு பெங்களூரைச் சேர்ந்தவரான ரத்தினபாலா என்ற 27 வயது துறவி தங்கியிருந்தார். பீகார் மாநிலம் புத்தகயாவுக்குச் செல்வதற்காக சென்னை வந்த அவர் இன்றுகாலை ரயில் மூலம் பீகார் செல்லத் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலையில் தனது அறையில் மின்விசிறியில் அவர் பிணமாகத் தொங்கினார். தனது இடுப்பு நாடாக் கயிற்றால் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். எதற்காக இந்தத் தற்கொலை என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
ரத்தினபாலாவீன் பூர்வீகம் ஜம்முகாஷ்மீர் மாநிலம் லடாக் ஆகும். 10ம் வகுப்பு படித்து முடித்தவுடன் அவர் துறவியாகி விட்டார். பெங்களூரில் வசித்து வந்தார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications