வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள்
மலப்புரம்: புற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெற கேரள மக்கள் பெரு நாட்டை நோக்கி படையெடுக்க உள்ளனர்.
புற்றுநோய்க்கு பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இயற்கை வைத்தியம் அளிக்கப்படுகிறது. அதாவது ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது. இந்த வைத்தியம் செய்யும் கிளினிக் ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
இந்த வைத்தியம் குறித்து அறிந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெரு நாட்டிற்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் வண்டு விழுங்கும் சிகிச்சை பெற கேரளாவைச் சேர்ந்த 3 பேர் இந்த வாரம் பெரு செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து 200 பேர் பெரு நாட்டிற்கு செல்கின்றனர்.
பெரு நாட்டிற்கு செல்ல விசா கோரி அந்நாட்டு தூதரகத்தில் ஏராளமான விண்ணப்பங்கள் கேரளாவில் இருந்து குவிந்ததால், தூதரகம் சார்பில் ஹமீத் ஹுசைன் என்பவரை அனுப்பி அந்த வைத்தியம் குறித்து ஆய்வு செய்ய வைத்தனர். அவர் பெரு நாட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வந்து உண்மையிலேயே வைத்தியம் செய்யத் தான் லிமா செல்ல பலர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை தெளிவுபடுத்தினார். அதன் பிறகு தான் புற்றுநோயாளிகளுக்கு விசா அளிக்க பெரு நாட்டு தூதரகம் முடிவு செய்தது.
கேரளாவில் இருந்து பெரு சென்று வைத்தியம் பெற விமான டிக்கெட் உள்பட குறைந்தது ரூ.3 லட்சம் செலவாகும். ஆனாலும் மக்கள் பெரு செல்ல தயாராக உள்ளனர் என்றார் ஹுசைன்.
பெரு நாட்டிற்கான முன்னாள் இந்திய தூதர் அப்புன்னி ரமேஷ் நுரையீரல் புற்றநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்ததாக தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டைச் சேர்ந்த அவர் குணமடைந்ததைப் பார்த்துவிட்டு தான் கேரள மக்கள் பெரு செல்ல முயற்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications