டெல்லியில் மேலும் ஒரு பலாத்காரம்- 20 வயது பெண்ணைக் கற்பழித்த ஐவர்- 3 பேர் சிக்கினர்
டெல்லி: ஏற்கனவே 23 வயது பிசியோதெரப்பி மாணவி மோசமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த பதட்டமே இன்னும் தணியாத நிலையில் டெல்லி அருகே மேலும் ஒரு பெண் ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு வயது 20. அலிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். ஜனவரி 1ம் தேதி இப்பெண் அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போதுதான் விவகாரம் வெளியே வந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். 2 பேரைத் தேடி வருகின்றனர்.
யோகேந்தர், சுனில்குமார், ராகுல் ஆகியோர்தான் கைது செய்ய்பட்டவர்கள் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் ஐந்து பேருமே அப்பெண்ணுக்குத் தெரிந்தவர்களாம். ஆனால் சம்பவத்தன்று ஐந்து பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஜனவரி 6ம் தேதிதான் அப்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
ஐந்து பேரும் சேர்ந்து அப்பெண்ணை ஒரு காரில் கடத்தினர். பின்னர் திக்ரிகுர்த் என்ற இடத்தி்ல வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications