தலிபான் போல ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு: திக்விஜய்சிங்

மத்தியப்பிரதேச மாநிலம் ரகோகர் நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. இந்த அமைப்புகள் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகின்றன. பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என பரிந்துரைக்க அடிப்படைவாதிகள் மட்டுமே விரும்புவார்கள்.
பெண்கள் ஜீன்ஸ் ஆடை, கணினி, செல்போன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு ஆர்.எஸ்.எஸ். கோரக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த அமைப்புக்கு இந்தியக் கலாசாரத்தின் மீது அவ்வளவு அன்பு இருந்தால், அதன் தொண்டர்கள் மேற்கத்திய நாட்டு உடையான ஷார்ட்ஸ்களை அணிந்து கொள்வது ஏன்?
திருமணம் என்பது சமூக ஒப்பந்தம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வர்ணித்துள்ளார். அந்தக் கட்டமைப்பில், ஆண்கள் வேலைக்குப் போவார்கள் என்றும் பெண்கள் வீடுகளுக்குள் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் லக்ஷ்மண ரேகையைத் தாண்டாமல், அதை மதித்து நடக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜய்வார்கியா கூறியுள்ளார். நான் மாநில முதல்வராக இப்போது இருந்தால், இப்படிப் பேசிய அவரைப் பதவியில் இருந்து நீக்கியிருப்போன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications