4 வயது மகளை சரமாரியாக அடித்து பிரிட்ஜில் அடைத்து வைத்த அப்பா
ராஜமுந்திரி, ஆந்திரா: ஆந்திராவில் 4 வயது மகளை இரக்கமே இல்லாமல் தாறுமாறாக அடித்து அவளை பிரிட்ஜுக்குள் போட்டு வைத்து விட்டார் ஒரு தந்தை. அந்த நபரை போலீஸார் கைது செய்து குழந்தையையும் மீட்டனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. இவர் சம்பவத்தன்று தனது 4 வயது மகள் மீது கோபம் கொண்டு சரமாரியாக அடித்தார். அப்படியும் ஆத்திரம் தீராமல், மகளை பிரிட்ஜில் போட்டு அடைத்து வைத்து விட்டார்.
இந்த விவரம் அறிந்ததும் அண்டை வீட்டார் பாஷாவின் வீட்டுக்குள் புகுந்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து பிரிட்ஜைத் திறந்து உள்ளே அடைக்கப்பட்டிருந்த குழந்தையை மீட்டனர்.
கடும் காயத்துடன் கடும் குளிரில் தவித்தபடி இருந்த குழந்தையை ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் நலம் அபாய கட்டத்தில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications