மின் வெட்டு ஓ.கே... 'சொல்லிட்டு' செய்யக் கோரி மதுரையில் 9ம் தேதி பந்த்
மதுரை: தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரான மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரையில் ஜனவரி 9ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பையும், அழைப்பையும் மதுரை தொழில் வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் 2 மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. அதேசமயம், தமிழகத்தின் இதரப் பகுதிகளில் குறைந்தது 10 மணி நேரம் மின்தடை அமல்செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என சகல தரப்பினரும் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
பல மாதங்களாக நீடித்து வரும் இந்த தொடர் மின்வெட்டால் தொழில்கள் முடங்கிப் போயுள்ளன. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக மினவெட்டை அமல்படுத்த வேண்டும், சென்னைக்கு ஒன்று, பிற பகுதிகளுக்கு ஒன்று என்று இல்லாமல், இருக்கிற மின்சாரத்தை அனைவருக்கும் சமமாக பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஜனவரி 9ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications