வள்ளுவர் சிலையைக் காக்க கன்னியாகுமரியில் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைக் காக்கக் கோரி ஜனவரி 19ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.
அரசின் அலட்சியத்தால் பாழாகி வரும் சிலை -கனிமொழி
முன்னதாக நேற்று நாகர்கோவில் வந்த திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில்கல்லூரி நிகழ்ச்சி, விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க வந்துள்ளேன். திமுக தலைவர் கலைஞர் தலைமையில் வரும் 19ம் தேதி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் பேராசிரியர் அன்பழகன், ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நமது கலச்சாரம், மொழி,இனம், பராம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். அந்த அடிப்படையில் திருக்குறள், தமிழகத்தில் முக்கிய பொக்கிஷமாக விளங்கி வருகிறது.
திருவள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் ஒரு நினைவு சின்னமாக கலைஞர் அமைத்தார். அதனை கூட இந்த அரசு பாதுகாக்கவில்லை. இந்த அரசு எல்லாவற்றையும் பாழ்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
பராமரிக்கப்படாமல் இருந்து இருந்தால் ராஜராஜசோழன் கட்டிய கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இன்று நிலைத்திருக்க முடியுமா, கருணாநிதி செய்த அத்தனையும் நிலைகுலைய செய்வது நல்லதல்ல. மொழி, இனத்தை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.இந்த அரசின் செயல்பாடுகள் குறித்து என்ன சொல்வது. மின்சாரம் இல்லாமல் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.
இந்த ஆட்சியை பற்றி நினைத்து பார்க்கவே முடியவில்லை. மக்கள் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளனர். அவர்கள் வரும் தேர்தலிலும், வருகின்ற தேர்தல்களிலும் தங்கள் தவற்றை திருத்திகொள்வார்கள். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர்சிலையை கூட காப்பாற்ற முடியாத அரசு எந்த நலத்திட்டங்களை செய்ய முடியும். மின்சாரம் இல்லாமல் சிறுதொழில்கள் நசிந்துள்ளன.
விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டமன்றங்கள் சரியாக வேலை செய்தாலே குற்றங்கள்குறையும் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications