துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்து மதுரை ஏர்போர்ட்டில் சிக்கிய தேவிப்பட்டினத்துக்காரர்
மதுரை: துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் மதுரை விமான நிலயைத்தில் குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது அப்துல் ரஹீம். அவரது மகன் கலிமுதீன்(49) துபாயில் சமையல் கலைஞராக உள்ளார். துபாயில் இருந்து கிளம்பிய அவர் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினார். 176 பேர் இருந்த விமானத்தில் வந்திறங்கிய அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் போலி பாஸ்போர்ட்டில் பஷிரித் என்ற போலி பெயரில் பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications