தந்தையின் பல வருட பாலியல் பலாத்காரம், இன்னொருவருடன் உறவு-பரிதாபத்துக்குரிய மாலத்தீவு சிறுமி
மாலே: மாலத்தீவில் வளர்ப்புத் தந்தையால் பல வருடம் பாலியல் பலாத்கார சித்திரவதைக்குள்ளான 15 வயது சிறுமி, இன்னொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததற்காக தற்போது சவுக்கடி தண்டனைக்குள்ளாகவுள்ளார்.
மாலத்தீவைச் சேர்ந்த அந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தை பல காலமாக தனது மகளை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து வந்தார். இதன் விளைவாக அந்த சிறுமிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் பிறந்த குழந்தையை தந்தை கொன்று புதைத்து விட்டார்.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு உறவு வரை போய் விட்டது. இதையடுத்து அவர் மீது அந்த ஊர் போலீஸார் வழக்குப் போட்டனர். இஸ்லாமியச் சட்டப்படி திருமணமாகாத பெண் வேறு ஒருவருடன் உறவு கொள்வது தவறு என்பதால் சிறுமி மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அவருக்கு சவுக்கடி தண்டனையும் தரப்படவுள்ளது. சிறுமி தற்போது மைனர் என்பதால் 18 வயது நிரம்பியதும் அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்.
தற்போது சிறுமியின் தந்தை செய்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை ஆகியவை ஒரு வழக்காகவும், சிறுமி இன்னொரு ஆணுடன் உறவு வைத்திருந்தது தனி வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications