வறட்சி பாதித்த டெல்டா விவசாயிகளின் போராட்டம் சூடு பிடிக்கிறது - 3வது நாளாக போராட்டம்

கொட்டும மழையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து இடங்களிலும் முறையாக செயல்படுத்த வேண்டும்.
விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 7- ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் முதல் விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 2-வது நாளாக நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வருகிற 11- ந் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. தஞ்சையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாய சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடடனர்.
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் போராட்ட குழுவினர் அமர்ந்திருந்தனர்.
அரசிடமிருந்து தங்களுக்குச் சாதகமான பதில் வராவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications